fbpx

‘வீடியோ’ பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை! 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள்  அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது  வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன் வயது 29. யுவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தனது செல்போனில் இருக்கும் படத்தை காட்டுவதாக கூறி புல் தோப்பு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை ஆளில்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர்  தனது செல்போனில் வைத்திருந்த ஆபாச படத்தை சிறுமிப் பார்க்கும்படி இவர் வற்புறுத்திருக்கிறார். மேலும் சிறுமியை அந்த படத்தை பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து சிறுமி  நடந்த விபரங்களை தனது தாயிடம் கூறி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு  அதிர்ச்சி அடைந்த தாயார் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாரி டிரைவர் மணிகண்டன் மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை லாரி ஓட்டுனர் மணிகண்டனை கைது செய்து அவர் மீது மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறையிலடைத்தனர். இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் மணிகண்டன் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது விசாரணையில் 11ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி ஆள் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஆபாச படத்தினை பார்க்க வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். இது அந்த பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராக இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என  காவல்துறை தரப்பிலிருந்து தெரிவித்து இருக்கிறது.

Rupa

Next Post

சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Tue Feb 7 , 2023
சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 13ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான https://www.tnpsc.gov.in, https://www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் […]

You May Like