fbpx

எந்த கட்டணமும் செலுத்தாமல் இ-பான் கார்டு பெறுவது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..‌! முழு விவரம் உள்ளே…

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய பான் கார்டு நீங்கள் தொலைத்து விட்டால் இ-பான் கார்டு இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

எப்படி டவுன்லோட் செய்வது…?

இ-பான் பெறுவதற்கு நீங்கள் முதலில் https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமானவரித்துறை இணையதளத்திற்கு சென்று லாகின் செய்யவும்..

பிறகு நீங்கள் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்..

அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும், தற்போது பான் எண்ணை பதிவிடவும்.. ஒருவேளை நீங்கள் பான் எண்ணை மறந்துவிட்டால், ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்.

பின்னர் விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்.

அடுத்து உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளே பதிவு செய்யவும். பிறகு ‘Confirm’ என்பதை தேர்வு செய்யவும்.

விண்ணப்பதாரரின் இ-மெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பான் கார்டு பெறுவதற்குக் கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம்.

Vignesh

Next Post

பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு...! என்ன காரணம்..‌?

Mon Feb 20 , 2023
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் கே சங்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் உள்ள பி ஏ சங்மா ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியை நடத்த மேகாலயாவின் விளையாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, மாநிலத்தில் ‘பாஜகவின் அலையைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி ஷில்லாங் மற்றும் துராவில் பிரதமர் […]

You May Like