fbpx

கொலை செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் ஆள் தேடிய காதல் ஜோடி..!! முகத்தில் 50 முறை கத்திக்குத்து..!!

ஜெர்மனியின் முனிச் பகுதியில் வசித்து வந்தவர் 24 வயதான அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியை சேர்ந்தவரான இவர், இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி சோஷியல் மீடியாவில் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு ஷஹ்ரபான் வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை, இதனால், பதறிப்போன குடும்பத்தினர், அவரை தேடிப்பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில் அந்த பெண்ணை தேடி வந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று அவரின் காரை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த காருக்குள் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தார். பின்னர் விசாரணையில், அது அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான் என்பதை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர். போலீசாரும் அதை நம்பி, காரில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, உடற்கூராய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதன்படி, காருக்குள் இருந்து கைப்பற்றப்பட்டது ஷஹ்ரபான் உடல் அல்ல என்பதும், ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ (23) என்பதும் தெரியவந்தது. கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் மூலம் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் குழம்பிய போலீசார் தேடுதல் பணியை தீவிரமாக்கி, தலைமறைவாக இருந்த ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் கே ஆகியோரை பிடித்துள்ளனர். இதனிடையே, ஷஹ்ரபானின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கி, பலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதுகுறித்து கைதான நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ”மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்துள்ளார். அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த தனது காதலனையும் அவர் கூட்டு சேர்த்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிவந்துள்ளனர். இதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை தொடங்கி தன்னை போன்ற பெண்ணை தேடி, அவர்களுடன் பேசவும் தொடங்கியுள்ளார். இந்த சூழலில்தான், அப்போதுதான் மாடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கியுள்ளார். கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான், அவ்வப்போது அழகுசாதன பொருட்களையும் வாங்கிக் கொடுத்து நெருக்கம் காட்டியுள்ளார். அந்த வகையில் கொலை நடந்த தினத்தில் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை, ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர். முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துள்ளனர். பின்பு அங்கிருந்து தப்பி ஓடியது அம்பலமாகியுள்ளது.

Chella

Next Post

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 6️ லட்சம் ரூபாய் மோசடி….! வட மாநில நபர்களை தட்டி தூக்கிய பெரம்பலூர் காவல்துறை….!

Thu Feb 2 , 2023
ரஞ்சித்குமார் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னிடம் துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இணையதளம் மூலமாக 6 ,23,552 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தனி படை அமைத்து மோசடி நபர்களை தேடும் […]

You May Like