fbpx

#காஞ்சிபுரம் : ஒரே தூக்கில் இறந்த நிலையில் காதலர்கள்.. காதலை ஏற்க மறுத்த பெற்றோர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் உள்ள உத்திரமேரூரில் ஜெயராமன் (29), எம்.காம் பட்டதாரி வசித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளாக பீர்க்கன்காரணை, அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த இளைஞர் உத்திரமேரூரில் படிக்கும்போதே பி.டெக் பட்டதாரியான இளம்பெண் யுவராணி (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே சுமார் 6 ஆண்டுகள் காதல் தொடர்ந்துள்ளது. சில நாட்களில் யுவராணிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தன்னுடைய காதலன் சந்திப்பதற்கு அவரது வீட்டிற்கு இளம்பெண் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெயராமனின் தாயார் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லை. 

இருவரும் ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். அதன் பிறகு மாலையில் வேலை முடிந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாய், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, காதலர்கள் இருவரும் ஒரே புடவையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காதலர்கள் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Baskar

Next Post

விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!! வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு..!! மத்திய அரசு அதிரடி

Thu Nov 24 , 2022
கிசான் அட்டை விவகாரத்தில் விவசாயிகள் வட்டி மானியத்தை எவ்வித தடையும் இன்றி பெறுவதற்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை […]

You May Like