fbpx

சற்றுமுன்…! வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி…! கொட்ட போகும் பயங்கர மழை

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் நாளை முதல் வரும் 9-ம் தேதி வரை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில்இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்.7-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Low pressure area over Bay of Bengal on 5th.

Vignesh

Next Post

அட்டகாசம்... மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500... யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...? முழு விவரம்

Wed Sep 4 , 2024
Notification that students can apply for Tamil Language Literary Aptitude Test.

You May Like