பாகிஸ்தானை சார்ந்த இக்ரா ஜீவானியும் உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யா ராஜை சார்ந்த முழாயம் சிங் யாதவ் என்பவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று நிலவிய சமயத்தில் லூடோ விளையாட்டின் மூலம் பலக ஆரம்பித்து ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி பெங்களூருவில் வசித்து வந்திருக்கிறது. தற்போது இக்ரா காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாகிஸ்தானிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரது கணவர் முலாயம் சிங் சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். பாகிஸ்தானைச் சார்ந்த இக்ரா ஜீவானியும் உத்திர பிரதேசத்தைச் சார்ந்த முலாயம் சிங் யாதவ் என்பவரும் ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். முலாயம் சிங்கின் அறிவுரைப்படி பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நேபாளம் வந்தடைந்தார் இக்ரா அங்குள்ள கோவிலில் அவரும் முலாயம் சிங் திருமணம் செய்து நேபாளத்தில் இருந்து பாட்னா வழியாக பெங்களூர் வந்தடைந்தனர். பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் மலாயம் சிங் யாதவ் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
பெங்களூருவில் தனது காதல் கணவருடன் இக்ரா வசித்து வந்தாலும் வாட்ஸ் அப் செயலி மூலம் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினருடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாடு மற்றும் இன்டர்நேஷனல் ஏர் ஷோ ஆகியவற்றிற்காக பெங்களூரு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பாதுகாப்புக் கருதி ஆன்லைன் அழைப்புகளையும் காவல்துறையினர் கவனித்து வந்தனர். இதில் பெங்களூருவில் இருந்து பாகிஸ்தானிற்கு அடிக்கடி அழைப்பு சென்று இருப்பதை அறிந்த காவல்துறை இது தொடர்பாக விசாரித்து இக்ராவை கைது செய்தது. மேலும் அவரிடம் இருந்த போலியான இந்திய ஆதார் அட்டையையும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது காதல் கதை தெரிய வந்திருக்கிறது. எனினும் இக்ரா சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதால் அவரை நாட்டில் இருந்து வெளியேற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது இந்திய அரசாங்கம். மேலும் போலியான ஆதார் அட்டை மற்றும் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக இந்தியாவில் தங்க வைத்தது ஆகிய குற்றத்திற்காக அவரது காதல் கணவர் முலாயம் சிங் யாதவ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.