fbpx

மத்தியப் பிரதேசம் : தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!! – எப்படி நிகழ்ந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நயாபுரா பகுதியில் உள்ள பால் பார்லர் ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 4:45 மணியளவில் ஏற்பட்ட தீ, பால் பார்லர் மற்றும் குடும்பத்தினரின் வீடு ஆகிய இரண்டையும் சூழ்ந்துள்ளது. நஹர் தர்வாஜா காவல் நிலையப் பொறுப்பாளர் மஞ்சு யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நயாபுராவில் உள்ள பால் பார்லரில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து ஏற்பட்ட அதே வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அப்போது அந்த கட்டிடத்திற்கும் தீ பரவியதில், இரவில் தூங்கி கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே கூடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உடல் கருகி பலி ஆகினர். அதிகாலை நேரம் என்பதால் தீ பரவுவதை அவர்கள் உணரவில்லை.. புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினர்.

Read more ; ”நம்ப முடியலனாலும் இதுதான் உண்மை”..!! வெறும் ரூ.225-க்கு வீடு விற்பனை..!! எங்கு தெரியுமா..?

English Summary

Madhya Pradesh: Four of a family die in fire at milk parlour-cum-residence in Dewas

Next Post

நெல்லை நீதிமன்ற வாசலில் நடந்த கொலை - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்...!

Sat Dec 21 , 2024
Murder at Nellai Courthouse Gate - Madras High Court takes up investigation on its own initiative

You May Like