மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டம் பகுதியில் இருக்கின்ற மைகார் அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீர் என்று மாயமானார். வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியிருந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இத்தகைய நிலையில் தான் அவருடைய வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற காட்டுப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது பால்வீர் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது சிறுமியை கதற, கதற முரட்டுத்தனமாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மேலும், வெறி தீராததால் உடல் முழுவதும் கடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடுமையான காயங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து ரவீந்திர குமார் ரவி மற்றும் அதில் படோலியா என்று இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். இதில் ஒருவர் அருகில் இருக்கின்ற பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.