மத்திய பிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவரை மறைந்த கணவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரைச் சார்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு நண்பர்கள் அதிகம். மேலும் தன்னை விட வயதில் குறைந்த நபர்களை நட்பாக்கி கொள்வது அந்த நபரின் வழக்கம். அவரது நண்பர்களும் இவரைப் போலவே மது போதைக்கு அடிமையானவர்கள் இந்நிலையில் அந்த நபர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது மனைவி தனது பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் தனது சொந்த முயற்சியால் பணியில் சேர்ந்திருக்கிறார் அந்த பெண்மணி. பணியில் சேர்ந்த பின் அந்த நிறுவனத்திற்கு அருகாமையில் வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என அப்பகுதியில் வாடகை வீடு தேடி அலைந்திருக்கிறார். அப்போது இவரை சந்தித்த அவரது மறைந்த கணவரின் நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு வீடு பார்த்து தருகிறோம் எனக் கூறி அந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று வீடுகளை காட்டி இருக்கின்றனர். பின்னர் அவர்களில் ஒருவரது வீட்டிற்கு அந்த பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த நபர்கள் மது அருந்திவிட்டு கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்மணியை அடித்து உதைத்து துன்புறுத்தவும் செய்திருக்கின்றனர் . இவர்களின் பலவந்தமான தாக்குதலில் அந்தப் பெண் மயங்கி விடவே அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். சிறிது நேரத்திற்கு பெண் சுயநினைவிற்கு வந்த அந்தப் பெண் அந்த இடத்தில் இருந்து தப்பி வந்து காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை தப்பியோடிய மது போதைக்கு அடிமையான அந்த நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீடு வாடகைக்கு தேடி வந்த பெண்ணை அவரது கணவரின் நண்பர்களே பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.