மதுரையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் நண்பராக பழகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் செல்வம் திடீரென்று மாயமானார் அவர் காணாமல் போனது தொடர்பாக அவருடைய மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார்.
அவருடைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் செந்தில் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அதன் மூலமாக அவர் கடைசியாக யாருடன் பேசி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் செந்தில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவருடைய நண்பர்களுடன் தான் கடைசியாக பேசியிருக்கிறார். என்பது தெரிய வந்தது. ஆகவே இது தொடர்பாக விசாரிப்பதற்காக அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி வருண் தலைமையில் தனி படை அமைத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் மதுரையில் வைத்து வரிச்சியூர் செல்வத்தை கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரிச்சியூர் செல்வம் செந்திலை தான்தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சென்டிலை சென்னைக்கு வரவழைத்து தன்னுடைய மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
நண்பர்களான வரிச்சியூர் செல்வத்துக்கும், செந்திலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டானதால் இருவரும் பிரிந்து விட்டனர் எனவும், சமரசம் செய்து கொள்வதற்காக மீண்டும் செந்திலை சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன் பேரில் சென்னைக்கு வந்த செந்திலை வரிச்சியூர் செல்வம் சென்னையில் வைத்து கொலை செய்துவிட்டார் எனவும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் மூலமாக தெரிய வந்தது. இந்த நிலையில், மதுரையில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆசிரியர் பட்டத்தை இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது