மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் 6 மாணவிகளிடம் ஆபாச காட்சிகளைக் காட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் .
47 வயதான பிரமோத் சர்தார் என்ற ஆசிரியர் அகோலா மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பல மாதங்களாக மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொல்ல கூடாது எனவும் மாணவிகளை மிரட்டியுள்ளார். 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஒருவர், குழந்தைகள் நல மையத்தின் கட்டணமில்லா உதவி எண்ணை அழைத்து, சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பின்னர், அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர், அதன் பிறகு ஆசிரியரைக் காவலில் எடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. வழக்கு விவரங்களின்படி, ஆசிரியர் கடந்த நான்கு மாதங்களாக மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி, தகாத முறையில் அவர்களைத் தொட்டுள்ளார். குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் பள்ளி சென்று விசாரணை நடத்தியதில், ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக 6 மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.
ஆசிரியரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஆஷா மிர்ஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; சோகம்..!! இயந்திரத்தில் சிக்கிய பெண்ணின் முடி.. உடல் வேறு.. தலை வேறாக பரிதாப மரணம்..!!