fbpx

காஞ்சிபுரம் அருகே……! டாஸ்மாக் ஊழியரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அதிரடி கைது…..!

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (42), வாலாஜாபாத் அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராம்(45) உள்ளிட்ட இருவரும் தாங்கள் பணிபுரிந்து வந்த அரசு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது கடைக்கு அருகே பதுங்கி இருந்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் துளசிதாஸை கூர்மையான இரும்பு ஆயுதத்தின் மூலமாக சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற ராமுவையும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த துளசிதாஸ் அதே இடத்திலேயே உயிரிழந்தார் ராமு உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முதுகில் துப்பாக்கி கொண்டு பாய்ந்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக துப்பாக்கிக் கொண்டு அகற்றப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர் கொலை சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த பீகார் மாநிலம் கைமோர் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (25) என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

அதோடு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அரவிந்த்குமார் ராம் (26) என்பவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தலைமறைவான குற்றவாளி பீகாரில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் பீகார் மாநிலத்திற்கு சென்று அரவிந்த் குமார் ராமை துப்பாக்கி முனையில் கைது செய்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் வாடகைக்கு வசித்துக் கொண்டு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார் அரவிந்த் குமார். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற சில தினங்களுக்கு முன்னர் உமேஷ் குமார் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கியிருக்கிறார். என்பதும், அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்திருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து தன்னிடமே தகராறு செய்கிறாயா? என்று துளசிதாஸ் உமேஷ் குமாரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட உமேஷ் குமார் உடனடியாக கிளம்பி பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார். பிறகு நடந்தவற்றை தன்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து துளசிதாசை கொலை செய்ய திட்டமிட்டு பீகார மாநிலத்தில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த 18 மாதமாக தலைமறைவாக இருந்த அரவிந்த் குமார் ராம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Next Post

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

Tue Jun 20 , 2023
தமிழ்நாட்டில் உள்ள பெண் சுய உதவிக்குழுக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியே, தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு […]

You May Like