fbpx

சற்று முன் அதிர்ச்சி…! 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்ற நடிகர் காலமானார்…!

தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மனைவிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்த வருகின்றனர்.

Vignesh

Next Post

’ஒரு மாதம் தான் டைம்’..!! அதுக்குள்ள மாத்திருங்க..!! அனைத்து கடைகளுக்கும் பாமக பகிரங்க எச்சரிக்கை..!!

Mon Mar 27 , 2023
ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பாமக தலைவர் ராமதாஸ் புதிய பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் எனவும்,  தமிழும் ஆங்கிலமும் கலந்து இருக்கலாம் ஆனால் தமிழ் இல்லாமல் ஒரு பெயர் பலகை கூட இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து […]

You May Like