இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார்.
அறிமுக இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனென்று உயிரிழந்தார்.
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஹெபடைடிஸ் நோயால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புதிய படம் ஒன்றை அவர் இயக்கி வந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோசப் மனு ஜேம்ஸ் ஆர்க்கிபிஸ்கோபல் மார்த் மரியம் ஆர்ச்டீகன் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் தனது முதல் திரைப்படமான நான்சி ராணியின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்திருந்தார், மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. இவரது மறைவு மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.