fbpx

நெல்லையில் பெரும்‌ சோகம்…! வெள்ள நீரில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்…!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ள நீரில் மிதந்து வரும் அடையாளம் தெரியாத நபரின் சடலம்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலமணி நேரம் நீடித்த மழையால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம். மீட்கப்பட்டால் தான் ஆண் சடலம் யார் என்பது குறித்தான விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

சற்றுமுன் முக்கிய அறிவிப்பு...! 23- ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைப்பு...!

Tue Dec 19 , 2023
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு […]

You May Like