fbpx

காசுக்காக மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.! 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு.! 3 பேர் கைது.!

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது கணவர் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினார்.

காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி அந்த பெண்ணை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அவரது கணவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் இருவரை அழைத்து தனது கண் முன்னே மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய அனுமதித்துள்ளார். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பி வந்த பெண் தனது பெற்றோருடன் வந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும் அதன் காரணமாக பணத்திற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்திருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Next Post

’கணவரை விவாகரத்து செய்து மகனையும் தத்துக் கொடுத்து விட்டேன்’..!! நடிகை கிருத்திகா பகீர் பேட்டி..!!

Tue Dec 19 , 2023
பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா, தனக்கு விவாகரத்தான விஷயத்தையும் தன் மகனைத் தத்துக் கொடுத்து விட்டதையும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இதற்கு முன்பு அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்ட இவர், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை வெளிப்படையாக கூறினார். நடனத்தில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, கலைஞர் […]

You May Like