fbpx

வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட நிர்வாண புகைப்படத்தை வைத்து 16 வயது சிறுமியை…..! மிரட்டிய இளைஞர் அதிரடி கைது…..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த (16) வயது சிறுமிக்கும் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெருவை சேர்ந்த கோபி (20) என்ற இளைஞரருக்கும் ஸ்னாப் சேட் என்ற செயலியின் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் சிறுமியிடம் கோபி வாட்ஸ்அப் மூலமாக புகைப்படம் அனுப்பி வை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அந்த சிறுமியும் தன்னுடைய ஆபாச புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் அதனை வைத்துக்கொண்டு அந்த இளைஞர் 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். அதோடு பணத்தை கொடுக்காவிட்டால் நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கீழையூர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். அதோடு இளைஞரின் கைபேசி எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தனி படை காவல்துறையினர் அவரை சென்னையில் வைத்து அதிரடியாக கைது செய்து நாகைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Next Post

தாயை கொலை செய்து சூட்கேசுடன் காவல் நிலையத்திற்கு வந்த மகள்…..! அதிர்ந்து போன காவல் துறையினர்…..!

Thu Jun 15 , 2023
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி சென் (39) என்பவர் தன்னுடைய தாய் மற்றும் மாமியாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். மேலும் இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தார் அடிக்கடி தன்னுடைய தாயார் பீவா பவுலுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண்மணி, தன்னுடைய தாயாருக்கு வாலில் பதினைந்து […]

You May Like