விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கணவரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(36). இவர் வல்கனைசிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா(30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயா அதே பகுதியைச் சேர்ந்த அசார் அலி(32) என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். இது தொடர்பாக ராஜா தனது மனைவியை பலமுறை கண்டித்திருக்கிறார். எனினும் ஜெயா, அசார் அலியுடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ராஜா வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது அசார் அலி மற்றும் ஜெயா இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வீடு திரும்பிய ஜெயாவின் கணவர் ராஜா இதை நேரில் கண்டு ஆத்திரம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாள் எடுத்து தனது மனைவியை கொடூரமாக வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தின் போது அசார் அலி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஜெயாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட கணவர் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.