உத்திரபிரதேசம் மாநிலத்தில் எச்சில் தட்டு விருந்தினர் மேல் பட்டதால் வெயிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் அமைந்துள்ள வாடிகா விருந்தினர் மாளிகையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. அங்கு உணவு பரிமாறும் பணியில் பங்கஜ் என்ற 26 வயது இளைஞர் பணியாற்றி இருக்கிறார் அப்போது விருந்தினர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டை எடுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த எச்சில் தட்டு ஒரு விருந்தினரின் மீது போட்டிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருமண வீட்டைச் சார்ந்தவர்கள் பங்கஜ் என்ற இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் அவர் இறந்ததை தொடர்ந்து அவரது உடலை அருகில் இருந்த குப்பைமேட்டில் வீசி சென்று இருக்கின்றனர். வேலைக்குச் சென்ற மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமித் குமார் மற்றும் மனோஜ் குப்தா உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.