fbpx

இன்ஸ்டாகிராமில் 14 வயது சிறுமியின் ஆபாச படம்.! முன்னாள் காதலனை கைது செய்த காவல்துறை.!

கோவாவைச் சார்ந்த இளைஞர் தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கோவா மாநிலம் மார்கோவை சேர்ந்த சமீர் ஹசாரா என்ற இளைஞர் 14 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது காதலியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் சிறுமியின் புகைப்படங்களை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி இது தொடர்பாக தனது தந்தையிடம் முறையிட்டு இருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை கோவா சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் சமீர் ஹசாரா என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 67பி மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் பிரிவு 8 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மசூதியில் அரங்கேறிய பயங்கரம்.! தொழுகைக்காக சென்ற முன்னால் காவல்துறை அதிகாரி படுகொலை.!

Sun Dec 24 , 2023
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி மசூதியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்த பின்பு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரில் சிறப்பு […]

You May Like