fbpx

ஆத்தி.! புயல் நிவாரண நிதியை கொடுக்காத கணவன்.! கத்தியால் குத்திய மனைவி.! அதிர்ச்சி சம்பவம்.!

சென்னை அருகே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்தவர் பண்பழகன். 51 வயதான இவர் சிவில் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது முதல் மனைவி இறந்த நிலையில் மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகையாக 6000 ரூபாய் வழங்கியது. இந்தத் தொகையை பண்பழகனும் வாங்கியிருக்கிறார். தனது கணவர் வாங்கிய நிவாரண தொகையை தன்னிடம் தருமாறு மகாலட்சுமி கேட்டிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் பண்பழகன்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பண்பழகனின் வயிற்றில் குத்தி இருக்கிறார். கத்தியால் குத்தியதால் வலி தாங்க முடியாமல் அலறிய பண்பழகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பண்பழகனிடம் புகாரை பெற்றுக் கொண்டு அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

Next Post

’இது ஆரம்பம்தான்’..!! ’2024இல் இன்னும் சில அமைச்சர்கள் சிறை செல்வார்கள்’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!

Thu Dec 21 , 2023
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ”பாஜக இத்தீர்ப்பை வரவேற்கிறது. தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத சமுதாயம் அமைய இது ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்புகிறோம். […]

You May Like