கடந்த 2009 ஆம் வருடம் ரஷ்யாவில் உள்ள செல்யாபிஸ்க் பகுதியைச் சேர்ந்த வினாடிமீர் சிஸ்கிடோ (51) என்பவருக்கு எகாடெரினா என்ற 19 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அப்போது முதியவர் அந்த இளம் பெண்ணை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்று பின்பு சிறையில் அடைத்திருக்கிறார். இதனால் அந்த இளம் பெண் கடுமையான மனநிலை பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்.
அதோடு அந்த இளம் பெண்ணை கடந்த 14 வருடங்களாக பாலியல் அடிமையாக வைத்திருந்த அந்த முதியவர், தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு சொந்தமான இடத்திலிருந்து பல்வேறு பாலியல் தொடர்பான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒரு ரகசிய இடத்தில் அந்த இளம் பெண்ணை சிறை வைத்த செஸ்கிடோ அந்தப் பெண்ணை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மற்றொரு பெண்ணை கடந்த 2011 ஆம் வருடம் அவர் கொலை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு நடுவே அந்த முதியவரின் பிடியிலிருந்து தப்பி சென்ற அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் செஸ்கிடோவை கைது செய்து இருக்கிறார்கள். அந்த இளம் பெண் தப்பி செல்வதற்கு அந்த முதியவரின் தாய் தான் உதவி செய்திருக்கிறார். மேலும் சிறிய தவறு செய்ததற்கெல்லாம் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்த முதியவர் மீது அந்த இளம் பெண் புகார் வழங்கி இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட அந்த முதியவரிடமிருந்து பல்வேறு பாலியல் விளையாட்டு பொம்மைகள், விலங்குகள் பாலியல் காட்சிகள் நிறைந்த சிடி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கானவே அந்த முதியவர் தன்னுடைய வீட்டின் பாதாள அறையில் அந்த இளம் பெண்ணை சிறை வைத்திருந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.