இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

CM Edappadi Palanisamy pays tribute to Dr V Shanta - Simplicity

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் மேலும் இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்துவதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.. மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்..

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது இபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய கூடுதல் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்..

Maha

Next Post

நடிகை ஸ்ருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா..? உண்மை என்ன..?

Thu Jul 7 , 2022
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனக்கு பிசிஓஎஸ் என்ற கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.. தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியதால் பலரும் அவரை பாராட்டி வரும் அதே நேரத்தில், ஸ்ருதியின் உடல்நிலை குறித்து பல […]

You May Like