fbpx

“நான் என்னோட அக்காவ ரொம்ப லவ் பண்றேன்”; காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தைக்கு, தாய்மாமா செய்த கொடூரம்..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பலராமபுரத்தில், ஸ்ரீஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீது என்ற மனைவியும், தேவேந்து என்ற 2 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவன் மனைவி குழந்தை என மூன்று பேரும் ஒன்றாக தூங்கியுள்ளனர். அப்போது திடீரென அருகில் இருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், இது தொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குழந்தையின் உடல் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்த பெற்றோர், கதறி துடித்துள்ளனர்.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், கிணற்றில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தையின் மாமாவான ஹரிகுமார் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ஹரிகுமார் என்பவர் தனது சொந்த சகோதரி ஸ்ரீதுவை காதலித்துள்ளார். ஸ்ரீதுவுக்கு திருமணமாகி இரண்டு வயதில் மகன் இருந்த போதிலும், அவரால் தனது சகோதரி மீதுள்ள காதலை மறக்க முடியவில்லை. மேலும், தனது அக்காவின் குழந்தை தனது காதலுக்கு தடையாக இருப்பதாக ஹரிகுமார் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார், தனது அக்காவின் 2 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, ஹரிகுமாரை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: “நீங்க ரெண்டு பேரும் கள்ளத்தொடர்பில் இருக்கீங்களா?” கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

English Summary

man killed 2 years old kid as he was in love with his own sister

Next Post

கல்லூரி குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

Sun Feb 2 , 2025
college student throwed the new born baby in trash

You May Like