fbpx

“குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை, எனக்கு கள்ளக்காதலி தான் வேணும்” குழந்தைகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்..

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் பிரகாஷினி என்ற மகளும், 5 வயதான அருள் பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி அசோக்குமார் தனது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது செல்போனில் கண்டு அவரது மனைவி தவமணி அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இது குறித்து தனது கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் கோவம் அடைந்த அசோக் குமார், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, அசோக்குமார் மீண்டும் வீட்டிற்க்கு வந்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி, மற்றும் குழந்தைகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் 5 வயது அருள் பிரகாஷ் மற்றும் 13 வயது வித்யதாரணியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குழந்தைகளை வெட்ட முயன்ற போது மனைவி தடுத்ததில் அசோக்குமாருக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயம் அடைந்த அசோக்குமாரின் மனைவி, ஒரு குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக மனைவி குழந்தைகளை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: தனியாக நடந்து சென்ற இளம்பெண் மீது, வாலிபருக்கு ஏற்பட்ட ஆசை; ஆசையை அடக்க முடியாமல் ரோட்டில் வாலிபர் செய்த காரியத்தால் பரபரப்பு..

English Summary

man killed his kids for illicit relationship

Next Post

எண் கணிதத்தைப் பயன்படுத்தி அதிர்ஷ்ட கார் எண்ணை எவ்வாறு தேர்வு செய்வது?

Fri Feb 21 , 2025
Drive with luck: How to choose an auspicious car number using numerology?

You May Like