அஜ்மத் என்ற நபர் ஒருவர், டெல்லியில் வசித்து வருகிறார். இவரது மனைவி, 21 வயதான ரித்திக் வர்மா என்ற நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் வெளியே சென்ற அஜ்மத், வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவியும் ரித்திக் வர்மாவும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அஜ்மத், தனது மனைவியையும் ரித்திக் வர்மாவையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரித்திக் வர்மா, மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், ரித்திக் வர்மாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ரித்திக் வர்மா மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, போலீசார் அஜ்மத் மீது பாரத் நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.