fbpx

“எனக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம்” விருந்து உணவில் விஷம் கலந்த தாய்மாமா; இறுதியில் நடந்த ட்விஸ்ட்..

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உட்ரே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அந்த பெண் தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்க்கு பிறகு, அப்பெண்ணின் வீட்டார் தம்பதியை அழைத்து அவர்களுக்கு கடந்த ஜன.7 அன்று, வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதினால், ஆத்திரம் அடைந்த அப்பெண்னின் தாய் மாமா மகேஷ் பாடில், வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கல்ந்துள்ளார். அப்போது, அதனை பார்த்த விருந்தினர்கள் சிலர் அவரை தடுத்துள்ளனர். இதனால் அவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்த விருந்தினர் யாரும் உணவை சாப்பிடாததினால், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விஷப் பொருள்களை அலட்சியமாக கையாண்டதற்காகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் சட்டப் பிரிவு 286 மற்றும் 125 கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் மகேஷ் பாடிலை தேடி வருகின்றனர்.

Read more: திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகல.. ரூ.5000 கேட்டு புதுமணப்பெண் கொடூர கொலை..!! கணவர் கைது.

English Summary

man poured poison into the food which was kept for feast

Next Post

சூப்பர் வாய்ப்பு...! குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்

Thu Jan 9 , 2025
The Tamil Nadu government has announced that you can apply for free coaching for the TNPSC Group-2 and Group-2A exams.

You May Like