திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் தனலட்சுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு, சின்னராசுவிடம் கூறியுள்ளார். ஆனால் சின்னராசு, தனலட்சுமி குள்ளமாக இருப்பதால் எனக்கு அவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது, 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனலட்சுமி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, தனலட்சுமியின் குடும்பத்தினர், சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார் சின்னராசுவை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்து வந்த நிலையில், மாப்பிள்ளை மட்டும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அடம் பிடித்துள்ளார். இதனால் அச்சமடைந்த தனலட்சுமி குடும்பத்தினர், போலீசாரின் முன்னிலையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, திருவண்ணாமலை, பெரியார் சிலை அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவில் விநாயகர் சன்னதி முன்பாக, இரு வீட்டார் முன்னிலையில் சின்ராசு தனலட்சுமி திருமணம் நடைபெற்றது.
Read more: இனி சப்பாத்தி சுடும் போது ஒரு ஸ்பூன் நெய் தடவுங்க… கேன்சரை கூட தடுக்கலாமாம்..