திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான அருண். இவரது மனைவி , 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் ஆகியோர் நியூடவுன், சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அருண், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகள்கள் இருவரும், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். அருண், கார் ஓட்டுனராக இருப்பதால், வாரம் ஒரு முறை மட்டும் தான் அவர் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில், அருணின் மனைவி மட்டும் பகல் நேரங்களில் தனியாக இருந்து வருகிறார். இதனை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து, அந்த மர்ம நபர், அந்தப் பெண் இருக்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
தனது உறவினர்கள் யாராவது வந்திருக்கலாம் என்று நினைத்த அந்தப் பெண், கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டு நின்ற அந்த மர்ம நபர், தனது ஆண் உறுப்பு காட்டி பாலியல் அத்துமீறலுக்கு முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன அந்தப் பெண், கத்தி கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்துவிடுவார்கள் என்ற ஆச்சதில், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் உடனடியாக நடந்த சம்பவம் குறித்து காவல் எண் 100க்கு தொலைப்பேசி மூலம் அழைத்து புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பெண் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Read more: சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை!!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.