வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. அங்கு வரதட்சணையாக கேட்ட பொருட்களை கொடுக்காததால் மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடமாநிலத்தில் திருமணத்திற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் தாலி கட்டுவதற்கு சற்று முன் மணமகன் வீட்டில் கேட்கப்பட்ட பிரிட்ஜ், சோபா செட், மோட்டார் பைக் போன்ற வரதட்சணை சீர் வராததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் இது போன்ற காரணங்களால் திருமணத்தை நிறுத்துவது நியாயமா? என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள அந்த மணமகன் எனக்கு பைக் கண்டிப்பாக வேண்டும் என விடாப்பிடியாக இருந்து திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.