தன்னுடைய வினோதமான செய்கையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்ட இளைஞர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது அவரின் வயிற்றை சிடி ஸ்கேன் எடுத்துள்ள மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் ஆணுறையால் சூழப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டறிந்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் அவரது உடலில் இருந்து ஆணுறை சூழப்பட்ட வாழைப்பழம் வெளியேற்றப்பட்டது. இதனால் தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவ வரலாற்றிலேயே இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என மருத்துவர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.
அந்த நபரும் தான் ஆணுறையில் வைத்து வாழைப்பழத்தை சாப்பிட்டதை ஒத்துக்கொண்டுள்ளார். அந்த நபருக்கு ஹார்மோன்கள் சார்ந்த மனப்பிறழ்வு இருக்கலாம். அதனால் இவ்வாறு செய்திருக்கலாம். அது தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு வாரங்களுக்கு பின் அந்த இளைஞர் மிகவும் நலமுடன் இருக்கிறார்.