நண்பனின் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி புவனேஸ்வரி. சங்கர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் உதயா. இவர் சங்கரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் உதயாவிற்கும் சங்கரின் மனைவி புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக மாறி இருக்கிறது.
சங்கர் வீட்டில் இல்லாத சமயத்தில் உதயா மற்றும் புவனேஸ்வரி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி அறிந்த சங்கர் புவனேஸ்வரி மற்றும் உதயா இருவரையும் கண்டித்து இருக்கிறார். எனினும் அவர்கள் தங்களது கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று சங்கர் வீட்டில் இல்லை என நினைத்து அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் உதயா.
அப்போது வீட்டில் மறைந்திருந்த சங்கர் உதயாவை கத்தியால் தாக்கி கொடூரமாக குத்தி இருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உதயாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சங்கரை கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சங்கரின் மேல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.