விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 24 வயதான சரவணகுமார், 21 வயதான ராஜா, 18 வயதான கந்தசாமி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகனான சரவணகுமாருக்கு திருமணமான நிலையில், இவர் தந்தை வீட்டின் அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இவரது கடைசி மகனான கந்தசாமி சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கந்தசாமி நேற்று வீட்டில் ரத்த வெள்ளத்தில், குடல் சரிந்து இறந்து கிடந்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த கந்தசாமியின் தந்தை, இது குறித்து அருப்புக் கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தியதில், சரணக்குமார் கந்தசாமியை கொலை செய்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் கந்தசாமியை கைது செய்து விசாரித்ததில், தனது தம்பி கந்தசாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் தனது மனைவி பிரிந்து சென்றதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணகுமார் மது அருந்திவிட்டு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.