fbpx

“உனக்கு என்னோட பொண்டாட்டி கேக்குதா?”; மனைவியின் கள்ளக்காதலனுக்கு கணவர் செய்த காரியம்..

விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில், ரத்தக்காயங்கள் ஏற்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றியுள்ளனர். அப்போது, அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை போலீசார் கைப்பற்றினர். அதன் மூலம், சடலமாக கிடப்பவர் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் அருகே உள்ள கொம்பை கிராமம், மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் 25 வயதான அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தேனி கொம்பையில் உள்ள அரவிந்தின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

பின்னர், விழுப்புரம் விரைந்த அரவிந்தின் குடும்பத்தினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைத்திருந்த அரவிந்தின் உடலை பார்த்து அது தங்கள் மகன் தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அரவிந்தை கொலை செய்தது யார் என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு: கொலை செய்யப்பட்ட அரவிந்த், சென்னையில் உள்ள அப்பளம் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, இவருக்கும் அங்கு வசித்து வரும் வெங்கந்தூரை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர், அரவிந்தை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், எதையும் கண்டுக்கொல்லாத அரவிந்த் தொடர்ந்து கார் டிரைவரின் மனைவியோடு பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அரவிந்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, சம்பவத்தன்று அரவிந்தை கார் டிரைவர் புதியதாக கார் வாங்கலாம் என்று கூறி, அதற்காக மறைமலைநகர் பகுதிக்கு நேரில் வரும்படி கூறியுள்ளார்.

இதை நம்பிய அரவிந்தும் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கார் டிரைவர், அவரது நண்பர் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, அரவிந்தை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அரவிந்த், மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அரவிந்தை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து காரில் வைத்து சென்றுள்ளனர். ஆனால் அரவிந்த் விக்கிரவாண்டி அருகே செல்லும் போது இறந்துள்ளார். இதையடுத்து, அவர் விபத்தில் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்க, விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையோரமாக அரவிந்தின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து, 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: மின்கம்பி அறுந்து விருந்ததால் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்..! ரயில் சேவை தொடர்பு எண்கள் அறிவிப்பு..!

English Summary

man-was-killed-by-a-man-for-being-in-illicit-relationship-with-her-wife

Next Post

”நாங்கள் ஸ்லீப்பர் செல்களா”..? ”நாம் தமிழர் கட்சியே ஸ்லீப் ஆகிவிட்டது”..!! கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் ஆதங்கம்..!!

Sat Nov 30 , 2024
"We are not sleeper cells, we are the Tamil Party that has gone to sleep," said the executives who left the party.

You May Like