fbpx

ஆந்திரா: செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கடித்து குதறிய சிங்கம்.! வன உயிரியல் பூங்காவில் நடந்த துயர சம்பவம்.!

‌ ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வனவிலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இறந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சூர் நகராட்சியில் வசிக்கும் 34 வயதான பிரஹலாத் குஜ்ஜார் என அடையாளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு காட்சி சாலைக்கு சென்ற அந்த நபர் பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன் நுழைந்தபோது சிங்கத்தின் தாக்குதலுக்கு பலியானதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்த நபர் பணியில் இருந்த கண்காணிப்பு அதிகாரிகளின் பயிற்சியும் மீறி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த 6 அடி சுவரைத் தாண்டி குதித்து சிங்கத்தின் அருகில் புகைப்படம் எடுக்க சென்றதாக பணியில் இருந்த கண்காணிப்பு அதிகாரி சி.செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கம் அவரின் உடல் பாகங்கள் எதையும் சாப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். அவரது கழுத்தில் சிங்கம் தாக்கிய தடங்கள் இருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக பராமரிப்பாளர் சென்று காப்பாற்றுவதற்கு முன் ‘டோங்கல்பூர்’ என்ற சிங்கம் அந்த இளைஞரை கொன்றுவிட்டது. தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் குடிபோதையில் இருந்தாரா என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பு கூடியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிங்கம் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது.

Next Post

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை.! ரூ.19,500/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Thu Feb 15 , 2024
தமிழ்நாடு நீலகிரி நீர்வளத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதகமண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 மற்றும் […]

You May Like