fbpx

#சென்னை: பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த நபரை இரவோடு இரவாக வெட்டி கொலை..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார். 

இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ வந்த கிண்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அத்துடன் உயிரிழந்த கார்த்திக்கின் மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணையும் செய்து வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து, பல கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

’பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு அக்கறை காட்டுவதில்லை’..!! - ஐகோர்ட் கிளை

Mon Nov 28 , 2022
ஆன்லைன் விளையாட்டுகள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எப்படி தெரியவந்தது என பெற்றோர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான்கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு […]

You May Like