புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள சிறப்பு மிக்க மணக்குள விநாயகர் கோவிலில் இருக்கும் யானை லட்சுமியை இன்று அதிகாலை நேரத்தில் பாகன் சக்திவேல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து லட்சுமி உயிரிழந்து விட்டது.
இந்த செய்தியை கேட்ட மக்கள் மற்றும் பக்தர்கள், திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1997 ஆம் ஆண்டில் லட்சுமி என்ற யானை மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று மனக்குள விநாயகர் கோயிலுக்கு இந்த யானையை வழங்கியுள்ளது.
சுமாராக 25 ஆண்டுகள் மனக்குள விநாயகர் கோவிலில் மக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளது. மேலும், புத்துணர்ச்சி முகாமிற்கு சென்று வரும் நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கோவிலில் இருந்து ஆசி வழங்கிய வந்ததாக கூறப்படுகிறது.
லட்சுமியானை அங்கே வரும் பக்தர்கள் மற்றும் மக்களுடன் மிகவும் அன்பாக பழகி வந்துள்ளது. அத்துடன் மக்களின் பேரன்பிற்கும் உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் லட்சுமி யானை திடீரென மரணமடைந்த செய்தி புதுச்சேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.