fbpx

உடலுக்கு குளிர்ச்சி தரும் மந்தாரை!… மூலம், தைராய்டு நோய்களுக்கு சிறந்த தீர்வு!… மருத்துவ குணங்கள் இதோ!

மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு இதில் அடங்கியுள்ள மருத்துவகுணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்கிறது.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன.

ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன. இதன் காரணமாக கோடைக்காலத்தில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். ரத்தக்கட்டிகளை குணமாக்கும்மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும். மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும்.

முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை.தைராய்டு நோய்க்கு தீர்வுதைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத்தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மன அழுத்தம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது. இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பினை சீராக்குவதோடு, உடல் நலனை சீராக்கும்.


Kokila

Next Post

வாட்டும் வெயில்!... உடல் சூட்டை தணிக்க!... மகிமை நிறைந்த மரமஞ்சள் பயன்கள் இதோ!...

Sun Apr 16 , 2023
மரமஞ்சள் அதிக மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. அவை எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்று இதில் காணலாம். மரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் […]

You May Like