தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி பல காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 14.11.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடையில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இப்பொழுது தமிழ்நாடு ரேஷன் கடை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை பார்க்கலாம்.
பணியின் முழு விவரம்…
நிறுவனம்: District Recruitment Bureau (மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்)
பணிகள்: நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் நியாயவிலைக்கடை கட்டுநர்
மொத்த காலியிடம்: பல இடங்கள்
பணியிடம்: தமிழ்நாடு
கல்வித்தகுதி: 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்
விண்ணப்பமுறை: அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2022