திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகே நத்தம் கிராமத்தில் சுஷ்மிதா (21) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்த வந்தார். இந்நிலையில், மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பவர் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ்குமாரும் சுஷ்மிதாவும் காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் தனிமையில் இருந்ததால் சுஷ்மிதா கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, இரு வீட்டாரும் கலந்து பேசி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதனையடுத்து, திருமணத்திற்கு தேவையான ஆடைகள் எடுப்பதற்காக சுஷ்மிதாவின் பெற்றோர் திருவாரூருக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சுஷ்மிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே, மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர், சுஷ்மிதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணமகனின் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.