திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை பணி நியமனத்திற்கு மகள் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை ஒரு மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுத்தர் பதவியில் பணியமர்த்தப்பட்டார், அவர் இறந்த பிறகு, பிரதிவாதியின் தாயார் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டார். பணி வழங்கப்பட்ட சிறிது காலத்தில் தாயும் இறந்துவிட்டார், இதனால் அவரது மூத்த மகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரினார், ஆனால் அவர் திருமணமானவர் என்ற காரணத்தால் அவரது மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.