fbpx

சோகம்…! தீயில் கருகிய 6 படகுகள்… 3 சுற்றுலா பயணிகள் மரணம்… மீட்பு தீவிரம்…!

காஷ்மீரில் நேற்று அதிகாலை ஹவுஸ் படகில் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 6 படகுகள் மற்றும் அதை ஒட்டியிருந்த மரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்ததால் 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மேலும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர். தால் ஏரி தீ விபத்தில் உயிரிழந்த மூன்று சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் அடையாளத்தை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் ஹவுஸ்போட் உரிமையாளர்கள் மற்றும் ஹவுஸ்போட் அசோசியேஷன் அதிகாரிகளிடம் குறிப்பாக எல்ஜி மனோஜ் சின்ஹா இந்த சம்பவத்தை நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். காஷ்மீரில் கடுமையான குளிர்காலம் நெருங்கி வருவதால் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Vignesh

Next Post

தொடர் மழையால் உபரிநீர் திறப்பு..!! 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Sun Nov 12 , 2023
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து, கடந்த 8ஆம் தேதி 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக விநாடிக்கு 900 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து […]

You May Like