fbpx

மஸ்தான் கொலை வழக்கு..!! மீண்டும் திருப்பம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய குடும்பம்..? திடுக்கிடும் பின்னணி..!!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான் (66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், திமுகவில் இணைந்த அவருக்கு கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மகளின் நிச்சயதார்த்தம் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 22ஆம் இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா மஸ்தானை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஸ்தான் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதை அடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக மஸ்தானின் கார் டிரைவரும், அவரது தம்பி மருமகனுமான இம்ரான் பாஷா, அவரது சித்தி மகன் தமீம் என்ற சுல்தான், நண்பர்கள் தவுபிக் அகமது, நசீர், லோகேஸ்வரன் ஆகியோரை கைது செய்து 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து போது, இந்த கொலையில் மஸ்தானின் தம்பி ஆதம் பாஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? மஸ்தானின் தம்பி ஆதம் பாஷாசை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா (26) மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மஸ்தானின் தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி, தம்பியின் மகள், தம்பியின் மருமகன் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Chella

Next Post

அரசு நிகழ்ச்சியில் கால் தவறி கீழே விழுந்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…..!

Mon Feb 20 , 2023
தற்போதைய இளம் தலைமுறையினருக்கு சமூகத்தில் பொறுப்பில்லை என்று பலவாறு பலர் குறை கூறி வருகிறார்கள். ஆனால் இளம் சமுதாயம் அணைத்தால் இந்த சாதனையையும் நிவர்த்தி காட்ட முடியும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்ததை தற்போதைய இளம் தலைமுறையினர் மெய்ப்பித்து கட்டி வருகிறார். அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் ஒன்றிணைந்து ஹைட்ரிட் வகை ராக்கெட் ஒன்றை தயாரித்தார்கள். அதோடு, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை […]

You May Like