உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் ரஹீம், கங்கா காட் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஜாமியா ரஹ்மத் என்ற மதரஸாவில் கற்பித்து வருகிறார். இந்த மதரஸாவில் படித்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய அவர், தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து கங்கா காட் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தன் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.