பொதுவாக இரவு நேரத்தில் தூங்கினாலும், பகல் நேரத்தில் தூங்கினாலும் பலருக்கும் கனவு வருவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் நமக்கு கனவில் வரும் விஷயம் நம் வாழ்வில் நடந்தது மற்றும் நடக்கப் போவதை தான் குறிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. ஒரு சில கனவுகள் வந்தால் அவை நமக்கு நல்லது நடக்கப் போவதை குறிக்கிறது என்றும், ஒரு சில கனவுகள் எதிர்காலத்தில் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்பது குறிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவியலின்படி கனவுகள் என்பது நம் ஆழ்ந்த மனதில் பதிந்த ஒரு விஷயம் தான். இவை எதிர்காலத்தில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சில கனவுகளின் பலன்கள் என்ன என்பதை குறித்து ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம்.
1. மீன்கள் கனவில் வந்தால் வீட்டில் சீக்கிரம் சுப காரியங்கள், திருமணங்கள் நடைபெறும் என்பது அர்த்தமாகும்.
2. யாரோ நம்மை அடிப்பது போல கனவு வந்தால் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள் என்றும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அர்த்தமாகும்.
3. காற்றில் மிதப்பதைப் போல கனவு வந்தால் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாகவோ அல்லது சுற்றுலா செல்வீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
4. இறப்பது போல் கனவில் வந்தால் மிகப்பெரும் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
5. நிர்வாணமாக இருப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது அல்லது எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
6. கனவில் ஓடுவது போல் வந்தால் ஏதோ பிரச்சனை துரத்துகிறது அல்லது துரத்த போகிறது என்பது அர்த்தமாகும்.
7. கீழே விழுவது போல கனவு வந்தால் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.
8. கனவில் கால்களையும், கைகளையும் கழுவுவது போல் வந்தால் இதுவரை உங்களை துரத்தி வந்த பிரச்சனைகள் மற்றும் துக்கங்கள் உங்களை விட்டு நீங்கும் என்று அர்த்தமாகும்.
9. முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நிகழும்.
10. கனவில் நாய் கடிப்பது போல் வந்தால் எதிர் காலத்தில் பிரச்சனைகள் வர போகிறது என்று அர்த்தமாகும்.