fbpx

பெற்றோர் கவனத்திற்கு…! 9-14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி போடுவதால் ஆபத்தா….? உண்மை என்ன..?

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கும் என்று சில ஊடக செய்திகள் யூக அடிப்படையில் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற செய்திகளில் உண்மை ஏதுமில்லை.நாட்டில் எச்.பி.வி தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிகழ்வுகளை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகளுடன் தொடர்ந்து அமைச்சகம் தொடர்பில் உள்ளது.

Vignesh

Next Post

'ராமர் என் கனவில் வந்தார்'!… நான் அயோத்திக்கு செல்லமாட்டேன்!... பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப்!

Mon Jan 15 , 2024
ராமர் தனது கனவில் வந்ததால், அதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி செல்லப் போவதில்லை என்று பீகார் அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜ் பிரதாப் கூறினார். வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த […]

You May Like