வரும் 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் 19.08.2023 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு பயனடையலாம். மேலும் இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் – அளவிலான புகைப்படம் – 4 இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் முகவரியையும், மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.