fbpx

ஹோட்டல் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

கேரள மாநில ஹோட்டலில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹோட்டல்களில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் பலருக்கும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஹோட்டல்களில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் நடந்த ஆய்வில் 112 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டன. 578 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹோட்டல், உணவகங்களில் அனைத்து பணியாளர்களும் உடல் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்றிதழ் எடுக்க வேண்டும். பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் ஹெல்த் கார்டு எடுக்காத பணியாளர் ஹோட்டல், உணவகங்களில் வேலை செய்யக்கூடாது. அப்படி வேலை செய்தால் அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும். உணவு பாதுகாப்பு விதிமுறைப்படி மருத்துவச் சான்றிதழ் இருக்க வேண்டும். சான்றிதழ் எடுக்காமல் இருந்தாலோ, போலிச் சான்றிதழ் வைத்திருந்தாலோ ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும்” எச்சரித்துள்ளார்.

ஹோட்டல் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

இதுகுறித்து சுகாதாரத்துறையின் சுற்றறிக்கையில்,

* பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து ஹெல்த் கார்ட் பெற வேண்டும்.

* ரத்தப் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை நடத்தி தான் மருத்துவர்கள் ஹெல்த் கார்டு வழங்க வேண்டும்.

* கிருமித்தொற்று, தொற்று நோய், தோல் நோய்கள், பார்வை குறைபாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* நோய் எதிர்ப்புக்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளனவா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

* ஹெல்த் கார்டுக்கான மாதிரி படிவம் உணவுப் பாதுகாப்பு கமிஷனர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஹெல்த் கார்டுகள் அனைத்தும் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் பரிசோதனை நடத்தும்போது அவற்றை காண்பிக்க வேண்டும்.

* 6 மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மீண்டும் செய்து ஹெல்த் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

Chella

Next Post

உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு….! வெட்டி சாய்க்கப்பட்ட 2 பேர் தென்காசி அருகே கொடூரம்….!

Thu Jan 19 , 2023
தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அரிவாள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் காலம் காலமாக தென் மாவட்ட மக்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன அரிவாள் கலாச்சாரம் அவ்வளவு எளிதில் குறைந்து விடுமா என்ன? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உறவினர்களான ஐயப்பன் மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோர் இடையே நில பிரச்சினை குறித்து […]

You May Like