இலுப்பை மரம் இந்த மரம் முழுவதுமே மனித சமூகத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. இலுப்பை மரத்திலிருந்து மாட்டு வண்டிகள், படகுகள், மரச்சாமான்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த மரத்தின் காய், வேர், இலைகள், மரப்பட்டைகள், புண்ணாக்கு என அனைத்தும் மனித சமூகத்திற்கு தேவையான பல மருத்துவ பயன்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தாய்ப்பால் சுரக்காத பெண்மணிகள் இலுப்பை மற இலைகளை மார்பில் கட்டி வர பால் நன்கு சுரக்கும். இலுப்பை காயில் இருந்து வரும் பால் புண்களை குணமாக்குவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவற்றின் காயை கீறி அவற்றில் வரும் பாலை புண்களின் மீது வைத்தால் புண்கள் விரைவில் குணமாகும். நார்ச்சத்துக்கள் நிறைந்த இலுப்பை பழம் இனிப்பு சுவை நிறைந்தது. மேலும் இந்த பழம் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வைக்கிறது.
இலுப்பை பழத்தின் விதையும் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த விதைகளில் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து நன்றாக சூட்டில் வதக்கி அவற்றை அரைத்து புண்களின் மீதும் வீக்கங்களின் மீதும் தடவினால் குணமாகும். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புண்ணாக்கை சோறு வடித்த கஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு தோல் வியாதிகள் மற்றும் சிரங்கு ஆகியவை குணமடையும். பண்டைய காலங்களில் சோப் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த முறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.