fbpx

தமிழகம் உட்பட 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த ஜவுளிப் பூங்கா…!

பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த ஜவுளிப் பூங்காக்கள் அமைய உள்ளன.

பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் இந்தப் பூங்காக்கள் அமைய உள்ளன.கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு, தரமான பட்டு நூல் உற்பத்தி செய்வதற்கான 14 தானியங்கி எந்திரங்களை அமைக்க மத்திய அரசு ரூ.6,585.68 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது என மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கோடை சீசனில் முலாம்பழம் அவசியம் சாப்பிடவேண்டும்!... ஏன் தெரியுமா?

Thu Apr 6 , 2023
முலாம் பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தூக்கக் கோளாறுகள் கூட நீங்கும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். இன்னும் பல நன்மைகள் உள்ளன. முலாம் பழத்தில் (Muskmelon) ஏராளமான சத்துக்கள் உள்ளன. நீரில் கரையும் வைட்டமின் சி இதில் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பழத்தில் கண் பார்வை, சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் ஏ இருக்கிறது. முலாம் பழத்தில் உள்ள கேலிக் […]

You May Like